கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ. கிளை மற்றும் கஹட்டோவிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பினால் 12 வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் , கடந்த 16.02.2022ம் திகதி கஹட்டோவிட்ட பாதிபிய்யா அரபுக்கல்லூரி கட்டிடத்தில் நடைபெற்றது. வதுபிடிவல ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்யப்பட்டதுடன் மரநடுகை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் பாதிபிய்யதுல் காதிரிய்யா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி எம்.என்.எம்.இஜ்லான் காஸிமி,தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளருமான எம்.எம்.மொஹமட்,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட கிளை தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம், நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர், வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவை சேர்ந்த அதிகாரிகள், கஹட்டோவிட்ட YMMA கிளை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
விடுமுறை தினமாக இருந்தும் கூட இம் முகாமில் கலந்து கொண்ட வைத்தியர் உட்பட அத்தகாரிகளுக்கும் இரத்த தானம் செய்த பொதுமக்களுக்கும் இந்நிகழ்வை சிறப்பாக செய்து முடிக்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ மற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பினர் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந் நிகழ்வின் போது அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கிளை சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் அக்ரம் அவர்களால், நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு புனித அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment