தெமட்டக்கொட கைரியா மகளிா் பாடசாலையின் 140வது வருடாந்த விழா கொழும்பு 7 நெலும்பொக்குன திரையரங்கில் கல்லுாாி அதிபா் நஸீரா ஹசனாா் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதியமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி கலந்து கொண்டு பாடசாலையில் இருந்து இம்முறை மருத்துவம், முகாமைத்துவம், சட்டம், கலைத்துறைகளுக்கு பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவித்தாா். இந் நிகழ்வில் கல்லுாி அதிபரின் சேவையைப் பாராட்டி பாடசாலை அபிவிருத்திக்குழு பெற்றாா்கள் மற்றும் பிரதி அதிபா்கள் ஆசிரியா்கள் விருது வழங்கி கௌரவித்தனா்.
இந் நிகழ்வில் மாணவிகளது கலைத்துறைகள் மேடை ஏற்பட்டதுடன். முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். பௌசி, முன்னாள் ஆ ளுனா் அசாத் சாலி, முன்னாள் மாகாணசபை உறுப்பிணா்களான அர்சத் நிசாமுதீன், மொஹமட் பாயிஸ் .சபீக் ரஜப்டீன், கொழும்பு வலயக் கல்விப்பணிப்பாளா் உட்பட பாடசாலை அபிவிருதிக்குழு, பழைய மாணவிகள் அதிபா்கள் ஆசிரியைகளும் கலந்து சிறப்பித்தனா்.
0 comments :
Post a Comment