இலங்கையில் இதுவரை கொவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்ற சுமார் 100,000 கர்ப்பிணித் தாய்மார்களிடமிருந்து எந்தவித சிக்கல்களும் பதிவு செய்யப்படவில்லை என்று, குடும்ப சுகாதாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
தடுப்பூசி பெற்ற அனைத்து தாய்மார்களின் தரவுத்தளத்தை நாங்கள் பராமரிக்கிறோம். அந்தத் தரவுகளின்படி, தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட தாய்மார்களில் எவரும் இதுவரை எதுவித சிக்கல்களுக்கும் உள்ளாகவில்லை.
தடுப்பூசி செலுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் பரிசோதித்தோம். அந்தப் பரிசோதனைகளின்போதும் அக்குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் உண்டாயிருக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசித் திட்டத்தின் நோக்கம் சிக்கல்களைக் குறைப்பதும், தாய்மார்களிடையே இறப்பைக் குறைப்பதும் ஆகும்.
எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் இன்னும் தடுப்பூசிகளைப் பெறவில்லை என்றால், தங்கள் உள்ளூர் குடும்ப சுகாதார அதிகாரியைத் தொடர்புகொண்டு, விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குடும்ப சுகாதாரப் பணியகம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.

0 comments :
Post a Comment