பொத்துவில் வேகாமம் 450 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்



பி. முஹாஜிரீன்-
பொத்துவில் வேகாமம் 450 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார்.

பொத்துவில் - லாகுகல பிரதேசங்களுக்கு இடையிலான எல்லையிடல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளும் போது, பொத்துவில் பிரதேச வேகாமம் காணிப் பிரச்சினையை முதலாவதாக தீர்த்து வைக்க வேண்டுமென வன ஜீவராசிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேகாமம் பகுதியில் 1956 களில் விவசாய செய்கைக்காக கொடுக்கப்பட்ட சுமார் ஆயிரத்து 900 ஏக்கர் வரையிலான காணிகள் 2006 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குரியதாக மாற்றப்பட்டிருந்தன.

அதன்பின்னர் இக்காணிகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. அக்காணிகளில் ஏறத்தாழ 450 ஏக்கர் அளவில் விடுவிக்க முடியும் என்று கடந்த காலங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூட பரிந்துரைகளை வழங்கியிருந்தன.

லாகுகல-பொத்துவில் எல்லை நிர்ணயம் குறித்து பொத்துவில் மற்றும் அம்பாறையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கமைய வனஜீவராசிகள் அமைச்சிலிருந்து இந்த எல்லைகளை இடுவது தொடர்பாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நில அளவை திணைக்களத்துக்கும் எல்லைகளை இடுவது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்பணிகள் கொவிட் தொற்றுக் காரணமாகவும் தாமதமாகின்றன.

குறித்த எல்லையிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது வேகாமம் காணிப் பிரச்சினை முன்னிலைப்படுத்தி உடனடியாக குறிப்பிட்ட 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :