இறைதூதர் இப்ராஹிமின் திடகாத்திரம் இலட்சியக் கொள்கைக்கு வழிகாட்டுகிறது



தியாகத்தின் திடகாத்திரத்தை உணர்த்தும் புனித ஹஜ்ஜுப் பெருநாளின் மகிமைகளை, வாழ்வில் கடைப்பிடிக்கப் பிரார்த்திப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட்தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளதாவது;

இன்று தியாகத் திருநாளைக் கொண்டாடும் சகலரது ஆகுமான எண்ணங்களும் ஈடேறப்பிரார்த்திக்கிறேன். இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களில் நமக்கான படிப்பினைகள் எல்லாம், அல்லாஹ்வுக்கு அடிபணிவதையே உணர்த்துகிறது.

தீர்மானங்களில் தடுமாறாமலும், விமர்சன ங்களுக்காகத் தளம்பாமலும் தன்பணிகளைச் செய்துகாட்டியவர்தான், இறைதூதர் இப்றாஹீம்."அல்லாஹ்வின்" உத்தரவுக்காக தன்னுடைய மகனையே அறுத்துப்பலியிடத் துணிந்த அவரின் தியாகம்,உலகம் அழியும்வரைக்கும் மார்க்கமாக்கப்பட்டிருக்கிறது. இதனால்தான் அல்லாஹ்வின் நண்பரெனப் பொருள்படும் "கலீலுல்லாஹ்" என்ற சிறப்புப் பெயராலும் அவர் அழைக்கப்படுகிறார்.

இவரது, முன்மாதிரிகளில் உலகியல் படிப்பினைகளும் பலவுள்ளன. சமூகத்தின் தேவைகளை அடைவதற்காக நாங்கள் எடுத்த அரசியல் தீர்மானங்களும் இவ்வாறுதான் விமர்சிக்கப்பட்டன.கள அறிவு, காலவோட்டத்தின் விளைவுகளைப் புரியாதோரின் இந்த விமர்சனங்களால், நாங்கள் தடுமாறவோ அல்லது தளம்பவோ இல்லை.

இப்போது, எமது நகர்வுகளல் ஏற்பட்டுள்ள நன்மைகளை முஸ்லிம் சமூகம் உணரத் தொடங்கியுள்ளது. தேவை ஏற்படின் இதுபோன்ற தீர்மானங்களைத்தான் நாங்கள் எதிர்காலத்திலும் எடுக்கவுள்ளோம். இதனால் உண்டாகவுள்ள எதிர்ப்புக்கள்,விமர்சனங்களை எல்லாம் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :