மே மாத வாடகையை அறவிட வேண்டாம் கடை உரிமையாளர்களுக்கு மூதூர் பிரதேச சபை தவிசாளர் வேண்டுகோள்.



ஹஸ்பர் ஏ ஹலீம்-
நாட்டில் நிலவி வரும் கொரோனா அசாதாரண சூழ்நிலையால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்றன. இதனால் பயணக் கட்டுப்பாடு,சுகாதார கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருந்து வருகின்றது.

குறிப்பாக மூதூர்,மற்றும் தோப்பூர் உட்பட பல பிரதேசங்களில் கடையடைப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வர்த்தகர்கள்,வியாபாரிகள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மூதூர் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.ஏ.அறூஸ் கருத்து தெரிவித்தார்.
மூதூர்,மற்றும் தோப்பூர் உட்பட பல பிரதேசங்களில் கடையடைப்பு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வர்த்தகர்கள்,வியாபாரிகள் ஒழுங்காக வியாபாரம் செய்ய முடியால் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்து வருவது யாவரும் அறிந்த விடயம் ஆகும்.

இதனை கருத்திற் கொண்டு எமது மூதூர் பிரதேச சபைக்குச் சொந்தமான கடைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தகர்களிடம் இருந்து மே மாதத்திற்கான வாடகையை அறவிடாமல் இருப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஏனைய தனியார் கடை உரிமையாளர்களும் மே மாத வாடகையை உங்கள் கடை வர்த்தகர்களிடம் இருந்து அறவிடாமல் அவர்களின் நிர்க்கதியான சூழ்நிலையை கரிசனையுடன் நோக்கி நியாயமான முறையில் நடந்து கொள்ளுமாறு அனைத்து கடை உரிமையாளர்களிடமும் கௌரவமாக வேண்டிக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மூதூர் வர்த்தக சங்கத்தினாலும் குறித்த விடயம் தொடர்பான வேண்டுகோள் கடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :