புலம்பெயர் திருமணத்தம்பதியின் முன்மாதிரியான கொண்டாட்டம்.

வி.ரிசகாதேவராஜா-

புலம்பெயர் திருமணத்தம்பதியினர் தமது திருமணநாளன்று லட்சக்கணக்கில் களியாட்டங்களுக்கு செலவுசெய்யாமல் அந்நிதியை தாயகத்தில் அல்லலுறும் ஏழை மாணவர்களுக்கு கற்றலுபகரணங்களை, பாக்குடன் வழங்கிவைத்த முன்மாதிரியான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் நேற்றையதினம் திருமணம்செய்த கௌதம் வைதிகா தம்பதியினர் தாயகக்குழந்தைகளின் கல்விவளர்ச்சிக்காக வடக்குகிழக்கில் பல இடங்களில் இவ்வுதவியைச் செய்துள்ளனர்.

புத்தாண்டையொட்டியதாக இந்நிகழ்வு நேற்று திருக்கோவில் வினாயகபுரம் பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய பாலக்குடா கிராமத்தில் இடம்பெற்றது.

அப்பகுதி சமுகசேவையாளர் எஸ்.நந்தபாலு விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மாவட்டத்தின் பிரபல சமுகசெயற்பாட்டாளர் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் இவ்வுதவியைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அப்பகுதி ஆலயத்தலைவர் எஸ்.மதன் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியர் எஸ்.இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துசிறப்பித்தனர்.

புலம்பெயர் திருமணங்களின்போது பல லட்சருபாக்கள் கேளிக்கை களியாட்டங்களுக்கு செலவு செய்யப்படுவது தெரிந்த விடயம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :