அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் புதிய பிரதேச செயலாளராக எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர் இன்று (10.03.2021) தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதவி உயர்வு பெற்று தன்னூரிலேயே செயலாளராக பதவியேற்கும் புதிய பிரதேச செயலாளருக்கு காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் மிகசிறப்பான அமோக வரவேற்பளிக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
அத்துடன் குறித்த பிரதேச செயலகத்தில் உதவிச் செயலாளராக இருக்கும் அஹமட் நசீல் இன்றுகடமையேற்ற செயலாளர் அஹமட் ஷாபிரின் ஒருமித்த மூத்த சகோதரர் ஆவார்.
பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூத்த சகோதரர் உதவி பிரதேச செயலாளராகவும், இளைய சகோதரர் பிரதேச செயலாளராகவும் ஒரே அலுவலகத்தில் சொந்த ஊரில் கடமை புரிவதும் இங்கு மிகவும் பெருமைக்குரிய விடயமாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஓய்வு பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகரான இதே ஊரைச்சேர்ந்த எஸ்.எல்.முகம்மது அப்துல் காதர் அவர்களின் ஐந்து மகன்களின் இவ்விருவர் அரச நிருவாக சேவையிலும் மேலும் மூவர் ஆசிரியர் சேவையிலும் பணியாற்றுவதுடன் மூத்தவர் ஆங்கில ஆசிரியர் காலஞ்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment