இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கு நிகழ்வு !


நூருல் ஹுதா உமர்-

ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அறநெறிபாடசாலை மாணவர்கள் உறுதிமொழி எடுக்கு நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு சித்தானைக்குட்டி சுவாமி அறநெறிப் பாடசாலையில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஐன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே. ஜெகதீசன், விசேட அதிதியாக ஸ்ரீ சித்தானைக்குட்டி ஆலயத்தின் தலைவர் எஸ். நந்தேஸ்வரன், காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிமாறன், காரைதீவு நீர்வழங்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி வி.விஐயசாந்தன், காரையடி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் எம்.மயில்வாகனம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆ.பூபாலரெத்தினம், சித்தானைக்குட்டி ஆலய செயலாளர் எஸ். பாஸ்கரன், பொருளாளர் த.தவக்குமார் மற்றும் இந்து சமய கலாச்சார மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி, காரைதீவு கலாசார உத்தியோகத்தர் திருமதி சிவலோஜினி மற்றும் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்


UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL

+94 766735454 / +94 757506564
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :