எவோட்ஸ் 2021கலை கலாசாரப்போட்டி

டந்த 40 ஆண்டுகளாக இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம், கடந்த 1995 ஆண்டு முதல் “எவோட்ஸ்” கலை, கலாசார போட்டிகளை நடத்திவருகின்றது. அவ் வகையில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு முதல் இந்தப் போட்டிகளை மாதாந்தம் நடத்தவுள்ளது

இப்போட்டிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களூடாக நடத்தப்படவுள்ளன. அதன் முதற் கட்டமாகத் திறந்த கவிதைப்போட்டி ஜனவரி மாதத்துக்கான போட்டியாக நடத்தப்படவுள்ளது.

போட்டிகளுக்கான நிபந்தனைகள்

1) உங்களுக்கு விருப்பமான தலைப்பில் கவிதைகளை அனுப்பலாம்.

2) கவிதைகள் மரபுக்கவிதையாகவோ, புதுக்கவிதைகளாக இருக்கலாம்.

3) கவிதைகள் 12வரிகளுக்கு குறையாமலும் 24வரிகளுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.

4) அனுப்படும் கவிதைகளில் சொந்தபெயர், புனைப்பெயர், முகவரி, தொலை பேசி இலக்கங்கள் போன்ற விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்

5) கவிதைகள் யாவும் எதிர்வரும் 18.01.2021க்குள் எமக்கு கிடைக்ககூடியதாக பதிவிடவேண்டும்

6) பதிவிடும் எமது வலைத்தளங்களின் விபரங்கள் வருமாறு; முகப்புத்தகம் வாயிலாக https://www.facebook.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-125209969320716 என்ற பக்கத்தின் மூலமாகவும் ; puthiya alai i என்ற வட்சப் குறுப் மூலமாகவும் மற்றும் puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற இமெயில் முகவரியூடாகவும் அனுப்பி வைக்கமுடியும்.

7) வயதெல்லை 15வயது முதல் 35வயது வரை
8) நடுவர்களின் முடிவே இறுதியானது.

இந்த போட்டிகளுக்கான பரிசளிப்புகள் அந்தந்த மாத இறுதியில் நடைபெறும். முதல் போட்டியான கவிதைப்போட்டிக்கான பரிசளிப்பு 30.01.2021 இல் நடைபெறும்.

பரிசுகளுக்காக மூன்று ஆக்கங்கள் மட்டுமே தெரிவு செய்யப்படும் அவற்றுக்கான பரிசுகளின் விபரம் வருமாறு

முதல்பரிசு :- 5000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்.

இரண்;டாம் பரிசு :- 3000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மூன்றாம் பரிசு :- 2000 ரூபா பணப்பரிசும் சான்றிதழும்

மேலதிக விபரங்களுக்கு 077 7412604, 077 6274099, 076 2002701 என்ற அலை பேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :