தோட்டங்களில் தற்போது வரட்சி நிலை காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் பாரிய அளவில் பாதமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு நாளந்தம் ஜீவிப்பது கூட கஸ்ட்டமாக காணப்படுகின்றன எனவே கௌரவ பிரதமர் அவர்கள் தோட்டத்தொழிலாளர்களிடமிருந்து அறவிடப்படும் 10 வீத செஸ் வரி அவர்களின் நலன்புரி விடயத்திற்கு பயன்படுத்துவதற்காக தேயிலை சபையில் உள்ளது. அதனையாவுது தோட்டத்தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்; தற்போதய பிரதமரின் ஆலோசகருமான எஸ் சதாசிவம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு தொலைபேசியூடாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்;ந்து தெரிவிக்கையில் நாட்டில் உள்ள பிரச்சிகளுடன் தோட்ட மக்கள் மிகவும் கஸட்டப்படுகின்றனர்கள் அவர்கள் அன்றாட உணவுக்கும் கஸ்ட்டப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே நான் மின்னஞ்சல் மூலம் பிரதமருக்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
