ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிதத்தில் தெய்வாதீனமாக உயிர் தப்பி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று முன்தினம் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவரில் ஒருவரை முதலை கடித்து இழுத்துச் சென்றபோது அதைக் கண்டுகொண்ட மற்றையவர் பாதிக்கப்பட்டவரை மிகப் போராட்டத்துக்கு மத்தியில் முதலையிடமிருந்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.
ஓட்டமாவடியைச் சேர்ந்த குறித்த நபரின் கால் பகுதியில் முதலை பலமாக கடித்துள்ளது இவ்வாறு பலத்த காயமடைந்த நபர் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அண்மைக்காலமாக ஓட்டமாவடி, மீராவோடை ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணத்தால் கரையோரங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவோர் பெரிதும் ஆபத்துக்களை எதிர்நோக்கும் நிலை காணப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
