அவரது உரையிலிருந்து சில கருத்துக்கள்...
நாங்களும் ஏன் சஜித் வேட்பாளராவதற்கு விரும்பினோம்?
கடந்த மூன்று மாதங்களாக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக நியமிக்கும்படி நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தோம். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் ஏன் அவரை நாங்கள் வேட்பாளராக நியமிக்கக் குரல் கொடுத்தோம் என்பதைத் தெளிவுறுத்தியாக வேண்டும்.
நாங்கள் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரியதற்கான காரணம், அவரை எங்களால் இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்பதனாலேயே. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நாமல் ராபஜபக்ஷவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார். திஸ்ஸமகாராம தேர்தல் பிரிவில் டீ.வி. சானக்கவினால் தோற்கடிக்கப்பட்டவர். அவர் வசித்துவருகின்ற லுணுகம்வெகர பிரதேச சபையில், அப்பிரதேச சபையின் தலைவராக இருந்த ரஸிக்க தினேஷினால் தோற்கடிக்கப்பட்டவர். அதனால் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிக்கச்செய்ய எங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அவசியமில்லை, லுணுகம்வெகர பிரதேச சபையின் ரஸிக்க தினேஷினால் அதனைச் சாதிக்க இயலும்.
சஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையின் தலைவராகி 2001 ஆம் ஆண்டு போட்டியிடும்போது ஐதேக 40% வாக்குகளையே பெற்றுக் கொண்டது. அவரது தலைமையின் கீழ் ஐதேக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக பின்னடைவையே சந்தித்தது. 2001 ஆம் ஆண்டு 40% வாக்குகள் 2010 ஆம் ஆண்டாகும்போது 30% வீதமாக வீழ்ச்சியடைந்தது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் நாடு தழுவிய ரீதியில் ஐதேக ஹம்பாந்தோட்டையில் தழுவிய வீழ்ச்சியைப் போன்ற வீழ்ச்சியையே சந்திக்கும்.
சஜித்தின் ஆளுமையை மட்டிட நாங்கள் புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரவி கருணாநாயக்க சொல்வதைப் போல, க.பொ.த (சா.த) பரீட்சையில் கூட சித்தியடைய முடியாதவர் - தனது தேர்தல் பிரிவில் வெற்றியீட்ட முடியாது.