கண்டி – கொழும்பு வீதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது

ண்டி - கொழும்பு வீதி வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவல்தெனிய கஜமா விகாரையில் வருடாந்த பெரஹெராவை முன்னிட்டு கண்டி - கொழும்பு வீதியில் வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ரங்வெல சந்தியிலிருந்து மீபிட்டி சந்தி வரையில் எதிர்வரும் 27ஆம் திகதி இரவு வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படவுள்ளது.

இதனால் கொழும்பிலிருந்து வரும் வாகனங்கள் ரங்வலியில் மாற்று பாதையின் ஊடாக மீபிட்டி வரையில் பயணித்து பிரதான வீதியில் பிரவேசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் வாகனங்கள் மீபிட்டி மாற்று வீதி ஊடாக சென்று பிரதான வீதிக்கு செல்ல முடியுமென அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -