முஸ்லிம் விவாக‌,விவாக‌ர‌த்து ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீமின் க‌ருத்துக்க‌ள் சர்ச்சை?


முபாற‌க் அப்துல் ம‌ஜீத்-
முஸ்லிம் விவாக‌,விவாக‌ர‌த்து ச‌ம்ப‌ந்த‌மாக‌ அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீமின் க‌ருத்துக்க‌ள் அவ‌ர் இஸ்லாத்தை விட‌ மேலைத்தேய‌ரை திருப்திப்ப‌டுத்தும் நோக்கிலேயே உள்ளார் என‌ தெரிகிற‌து என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

முஸ்லிம் விவாக‌, விவாக‌ர‌த்து என்ப‌து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌தாகும். இஸ்லாம் ப‌ற்றிய‌ போதிய‌ அறிவில்லாத‌ ஹ‌க்கீம் போன்ற‌வ‌ர்க‌ள் இது விட‌ய‌ம் ப‌ற்றி பொதும‌க்க‌ள் முன்பாக‌ பேசுவ‌தை த‌விர்த்துக்கொள்ள‌ வேண்டும்.
பொது ம‌க்க‌ளை பொறுத்த‌வ‌ரை ஓர் அமைச்ச‌ர் பேசும்போது குறுக்கிட‌ மாட்டார்க‌ள் என்ப‌த‌ற்காக‌ தாம் பேசுவ‌தெல்லாம் ச‌ரி என‌ நினைக்க‌ கூடாது.
பெண்க‌ளின் திரும‌ண‌ வ‌ய‌தெல்லை இதுதான் என‌ குர் ஆனில் குறிப்பிட‌வில்லை என‌ சொல்லும் அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீம் பெண்க‌ளின் திரும‌ண‌ வ‌ய‌தெல்லை 16 அல்ல‌து 18 என‌ ஏன் வ‌ரைய‌றுக்க‌ வேண்டும் என‌ கேட்கின்றோம்.
இல‌ங்கை முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்தில் பெண்ணின் திரும‌ண‌ வ‌ய‌து என்ப‌து 12 என‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து த‌வ‌றாயின் பெண்ணின் வ‌ய‌து 18 என்று கூட‌ குறிப்பிட‌ கூடாது. எத்த‌னை வ‌ய‌திலும் பெண் திரும‌ண‌ம் செய்ய‌லாம் என்று குறிப்பிட‌ வேண்டும்.
ஆனாலும் இஸ்லாம் பெண்ணின் வ‌ய‌தை குறிப்பிடாவிட்டாலும் பெண் ப‌ருவ‌ம‌டைவ‌து அவ‌ள் திரும‌ண‌ வ‌ய‌து என‌ சொல்லியுள்ள‌து. பெண் இந்த‌ வ‌ய‌தில்தான் ப‌ருவ‌ம‌டைவாள் என்றில்லை. 9, 12, 14, 16 வ‌ய‌திலும் ப‌ருவ‌ம‌டைவாள் என்ப‌தாலும் பெரும்பாலும் 12 வ‌ய‌தில் ப‌ருவ‌ம‌டைவார்க‌ள் என்ப‌தால் ந‌ம் முன்னோர் 12 என‌ நிர்ண‌யித்துள்ளார்க‌ள்.
அத்துட‌ன் பெண் ப‌ருவ‌ம‌டைந்த‌வுட‌ன் க‌ட்டாய‌ம் அவ‌ளுக்கு திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டும் என‌ இஸ்லாம் சொல்ல‌வில்லை. ப‌ல‌ரும் இவ்வாறான‌ ம‌ட‌மையில் இருக்கிறார்க‌ள். எந்த‌ வ‌ய‌திலும் பெண் திரும‌ண‌ம் செய்ய‌லாம். ஆனால் சூழ்நிலை கார‌ண‌மாக‌ ஒரு பெண்ணுக்கு க‌ட்டாய‌ம் ம‌ண‌ முடித்து வைக்க‌த்தான் வேண்டும் என்ற‌ நிலை வ‌ந்தால் அவ‌ள‌து ப‌ருவ‌ வ‌ய‌தில் ம‌ண‌முடித்து வைக்க‌லாம் என்ற‌ அனும‌தியை இஸ்லாம் த‌ந்துள்ள‌து.

இஸ்லாம் எக்கால‌த்துக்கும் ஏற்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை த‌ந்துள்ள‌து. இன்றைய‌ ந‌வீன‌ யுக‌த்தில் பாட‌சாலை, டியூச‌ன், செல் போன் கார‌ண‌மாக‌ காத‌ல் அதிக‌ம் ப‌ர‌விவிட்ட‌தையும் பெண்ணின் விருப்ப‌த்துட‌ன் துஷ்பிர‌யோக‌ம் ந‌ட‌ப்ப‌தையும் அதிக‌ம் காண்கிறோம். அவ்வாறு 13 வ‌ய‌து பெண்ணுக்கு ஏற்ப‌ட்டு அவ‌ள் க‌ர்ப்ப‌மானால் அல்ல‌து க‌ல்யாண‌ம் முடித்து த‌ராவிட்டால் ஓடிப்போவேன் என‌ அட‌ம் பிடித்தால் அவ‌ளுக்கும் என்ன‌ தீர்வு என்ப‌த‌ற்கான‌ விடையே ப‌ருவ‌ம‌டைத‌லை இஸ்லாம் திரும‌ண‌ வ‌ய‌தாக‌ ஆக்கியுள்க‌மையாகும். இவையெல்லாம் முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ க‌ட்சி உருவாகு முன் ந‌ம் முன்னோர் ந‌ம‌க்கு பெற்றுத்த‌ந்த‌ உரிமையாகும்.
அமைச்ச‌ர் ர‌வூப் ஹ‌க்கீமை த‌லைவ‌ராக‌ கொண்ட‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இந்த‌ 19 வ‌ருட‌த்துள் முஸ்லிம்க‌ளுக்கென‌ எந்த‌ ந‌ன்மையையும் உரிமைக‌ளையும் பெற்றுத்த‌ராத‌ நிலையில் இருக்கும் உரிமைக‌ளையும் இல்லாம‌லாக்க‌ துணை போக‌ வேண்டாம் என‌ கூறுகிறோம்.
எம்மை பொறுத்த‌ வ‌ரை முஸ்லிம் திருமண‌ ச‌ட்ட‌த்தை திருத்துவது இன்றைய‌ முஸ்லிம் ச‌மூக‌த்தின் தேவை அல்ல‌. உங்க‌ளால் முடிந்தால் அர‌சு கொண்டு வ‌ரும் முஸ்லிம் விரோத‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ங்க‌ளை திருத்த‌ பாருங்க‌ள். அத‌ற்கு வ‌க்கில்லாம‌ல் முஸ்லிம் ச‌மூக‌ம் ஆண்டாண்டு கால‌ம் அனுப‌விக்கும் உரிமையில் கை வைக்க‌ வேண்டாம் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -