இச்சுற்றுப் போட்டியில் அமீரகத்தில் உள்ள இலங்கையின் மிக முக்கிய பாடசாலைகளின் அமீரக கிளைகள், இலங்கை சார் ஒன்றியங்கள் மற்றும் அணிகள் கலந்து சிறப்பித்தன.
லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் சுமார் 16 அணிகள் பங்கேற்றதுடன், நான்கு பிரிவுகளாக குழுக்கள் அமைக்கப்பட்டு இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்றன. இதில் யுனைட்டெட் ஸ்டார்ஸ் அணி சாம்பியனாக தெரிவானதுடன், சிலோன் செலன்ஜர்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வுக்கு மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபர் நிஸாம் மற்றும் மாவனல்லை செரண்டிப் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அல்-ஹாஜ் இக்பால் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் அமீரக கிளையின் விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்படி சுற்றுப் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டதுடன், இதன் அறிமுக நிகழ்வு கடந்த 2.11.2018 அன்று Holiday Inn Express Dubai Airport Hotel வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
தகவல் : Shamran Nawaz