திருகோணமலையில் உள்ள பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படும்-இம்ரான் எம்.பி


திருகோணமலையில் அமைந்துள்ள பாடசாலைகளின் மைதானங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.இன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் தலைமையில் பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் விளையாட்டு திறனை அதிகரிக்க பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். எமது அமைச்சால் விரைவில் வழங்கப்படவுள்ள விளையாட்டு ஆசிரியர் நியமனம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அந்த வகையில் திருகோணமலையில் உள்ள 31 பாடசாலை மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் பொருத்தமான பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு மைதான அபிவிருத்தி மட்டுமல்லாது அந்த பாடசாலைகளை கிழக்கு மாகாணத்தின் சிறந்த விளையாட்டு திறனை வெளிகாட்டும் பாடசாலைகளாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -