இன்று நியமனம் பெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் விபரம்..!

ம்பளை நகர சபையின் முன்னாள் நகர சபை தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி

இன்று (02) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தார்.

அவர் ஜனாதிபதியினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட
அமைப்பாளராக நியமிப்பட்டுள்ளதுடன், அதற்கான நியமனக் கடிதத்தையும்
பெற்றுக்கொண்டார்.

சரத் காமினி ஹெட்டியாரச்சி கடந்த சில வருடங்களாக கூட்டு எதரணியுடன் இணைந்து
செயற்பட்டுவந்த உறுப்பினராவார்.

இதேநேரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19 புதிய அமைப்பாளர்கள் இன்று முற்பகல்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இன்று நியமனம் பெற்ற புதிய அமைப்பாளர்கள்
நுவரெலியா தொகுதி இணை அமைப்பாளர் – ரொஷான் குணவர்த்தன
கண்டி மாவட்டம் – சரத் காமினி ஹெட்டியாரச்சி
கம்பஹா மாவட்டம் – பிரதீப் சந்தன பெரேரா/நலின் சேனக திசாநாயக
கொழும்பு மாவட்டம் – சந்திரிக்கா டி சொய்சா
காலி மாவட்டம் – அசாம் ஹமாட்
அநுராதபுர மாவட்டம் – எம்.ஆர்.பீ. ஞானதிலக
புத்தளம் மாவட்டம் – மல்பினீ விதாரண
காலி மாவட்டம் – பீ.எச். சம்பிகா நிரஞ்சலீ/டபிள்யு.ஏ நிலானி
நிந்தவூர் பிரதேச சபை அதிகாரப் பிரதேசம் – வை.எல். சுலைமா லெப்பை
இரத்தினபுரி மாவட்டம் – சமன் இந்திக மானவகேஃ கே.எம்.எஸ்.எஸ்.ரத்நாயக
திகாமடுல்லை மாவட்டம் – எம்.எச்.எம்.சஹீல்
திகாமடுல்லை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை அதிகார பிரதேசத்தின் முஸ்லிம்
குடியேற்ற பிரதேசம் – அப்துல் மஜீட் ஜாஹிர்
திகாமடுல்லை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச சபை அதிகார பிரதேசம் –
எஸ்.விக்னேஸ்வரன்
மட்டக்களப்பு மாவட்டம் – எஸ்.சுஜான்/குணரத்னம் ஹரிதரன்
கண்டி மாவட்டம் – அழகர் செல்வகுமார்
இரத்தினபுரி மாவட்டம் – நிமல் காமினி வீரசிங்க
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -