கிழக்கு முதலமைச்சரின் ஏற்பாட்டில் நாளை (15) மாபெரும் இப்தார் நிகழ்வு

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அனுசரணையில் நாளை (15) ஆம் திகதி மாபெரும் இப்தார் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இந்த இப்தார் நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம்க காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்,

ஏறாவூர் அலிகார் தேசியப் பாடசாலையில் இடம்பெறவுள்ள இந்த இப்தார் நிகழ்வில் பங்கேற்க மூவாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் ரமழான் முழுவதும் ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இப்தார் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த பாரிய இப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இதன் போது மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் தூஆப் பிரார்த்தனை ஆகியனவும் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -