கல்முனையில் ஓன்றிணைந்த தொழிற்சங்கங்களின் மே தின ஊர்வலலும் பொதுக்கூட்டமும்

றியாத் ஏ. மஜீத், எம்.எம்.ஜபீர்-

கல்முனையில் ஓன்றிணைந்த தொழிற்சங்கங்களின் மே தின ஊர்வலலும் பொதுக்கூட்டமும்கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் இன்று (01) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.

இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.அஹூவர் தலைமையில்தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம்வியாழேந்திரன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர்ஏ.பாவா, கே.ஏ.தௌபீக் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

மே தின ஊர்வலம் கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலிருந்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரைசென்றதுடன் அங்கு மே தின பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.

இந்த மே தின நிகழ்வில் அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற்சங்கம்,சம்மாந்துறை ஆசிரியர் சங்கம், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்,சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கம், இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கம், கிராமஉத்தியோத்தர் சங்கம், முச்சக்கர வண்டி சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள்,சிறுகைத்தொழில் சங்கங்கள் ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

இதன்போது தொழிற்சங்கங்களுக்கு ஏற்ற பிரேரணைகளும் பிரகடனம் செய்யப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -