கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா நியமனம்!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் புதிய வேந்தராக வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிபார்சில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (09.05.2017) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனம் நியமனத் தேதியிலிருந்து 5 வருட காலத்திற்குரியதாகும்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் வேந்தராகப் பதவி வகித்த பேராசிரியை யோகா இராசநாயகத்தின் பதவிக்காலம் ஏற்கெனவே கடந்த 2016 ஓகஸ்ட் மாதம் நிறைவடைந்ததையடுத்து அப்பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்தது.

இதன் காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி இடம்பெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த அப்பல்கலைக் கழகத்தின் 21வது பொதுப் பட்டமளிப்பு விழாவும் புதிய வேந்தர் நியமனம் இடம்பெறும் வரை காலவரையறையின்றி பிற்போடப்பட்டு வந்தது.
பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறும் போது சம்பிரதாயப்படி அதன் வேந்தர் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்பது மரபாகும்.

எவ்வாறாயினும், புதிய வேந்தர் தற்பொழுது நியமிக்கப்பட்டிருப்பதால் 21வது பொதுப் பட்டமளிப்பபு விழா புதிய வேந்தரின் பிரசன்னத்துடன் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென அப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -