ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை - வைத்தியம் பார்ப்பேன் என்கிறார்


ஸ்லாம் ஒரு புற்றுநோய் அது இன்று உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது என பொதுபல சேனா பொது செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கொழும்பில் இன்று நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

பசுக்கள் கொல்லப்பட ஆரம்பித்தது முதலே உலகத்திற்கு அதர்மம் இறங்கியது. இன்று இந்த நாட்டில் இது சர்வசாதாரனமாக நடந்தேருகிறது. அநகாரிக தர்மபால அவர்கள் மாடு அருக்க தடை விதித்தார். அவருடைய கோரிக்கைக்கு அப்போது இருந்த ஆட்சியாளர்களால் செவிமடுக்க முடியும் என்றால் இப்போது உள்ளவர்களால் ஏன் முடியாது.

மாடறுப்பு தொடர்பில் நாம் தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தால் இன்று ஹஜ் காலத்தில் வீடுகளில் வைத்து மாடுகளை அறுத்து பலியிடமாட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் அதுவும் எமது உரிமை என கோருவார்கள். அதன் பின்னர் பங்களாதேஷை போல வீதிகளில் மாட்டு இரத்தத்தை ஓடவிடுவார்கள்.

நாம் இவர்களை அளவுக்கு அதிகமாக ஆடவிட்டதால் இன்று எமது தலைக்கு மேல் ஆட்டம் போடுகிறார்கள். சில முஸ்லிம்கள் எமக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள். அதற்க்கு இடமளிக்க முடியாது .விரைவில் இவர்களுக்கு நல்ல ஒரு கசாயம் தேவைப்படுகிறது போல் உள்ளது.

இவர்களுக்கு தேவையான மருந்தை நாம் கொடுக்க தயாராக உள்ளோம். அவர்களுக்கு தேவை என்றால் ஆங்கில வைத்தியம் அல்லது சிங்கள வைத்தியம் அல்லது முல்லு முறிவு வைத்தியம் என எதுவாக இருந்தால் நாம் வைத்தியம் பார்க்க தயாராக உள்ளோம்.

இஸ்லாம் ஒரு புற்றுநோய் அது இன்று உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது இந்த நாட்டு முஸ்லிம்களை நாம் சரிசெய்யவேண்டும் இல்லாவிட்டால் அவர்களை சவுதி அரேபியாவுக்கே விரட்டிவிடவேண்டும் என குறிப்பிட்டார்.

அல்குர் ஆன் பிற மத நம்பிக்கையாளர்களுடன் போரிடுமாறு கூறுவதாகவும். பிற மத நம்பிக்கையுடையவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது முஸ்லிம்கள் அவர்களுடன் ஒற்றுமையாக இருப்பதுபோல இருந்து அவர்களை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என அல்தகியா என்ற இஸ்லாமிய போதனை அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இலங்கையில் வஹாபிசம் தலைதூக்கியுள்ளதாகவும் பல நிறுவனங்கள் ஊடாக இலங்கைக்கு பணம் கோடிக்கணக்கில் வருவதாகவும் குறிப்பிட்ட அவர் ஹிரா பவுண்டேஷன் ஊடக 1500 கோடியில் இஸ்லாமிய பல்கலைகழகம் கட்டப்படுவதாகவும் மஹிந்த ஆட்சியில் அதற்க்கு அனுமதி வழங்கப்பட்டு இப்போது கட்டுமானபணிகள் தொடர்ந்து செல்வதாகவும் இதனூடாக நாட்டில் ஐ எஸ் போன்ற கொள்கையுடய தீவிரவாதிகள் உருவாகுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -