திருகோணமலை: டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக புதிதாக ஊழியர்கள் நியமிப்பு

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை நகர்பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக முழு நேரமும் இன்று (09) செவ்வாய்கிழமை முதல் 20 சகாதார தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் வீ.விஜயகுமார் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோயினை தொடர்ச்சியாக இல்லாமல் செய்யும் நோக்கில் பல நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

திருகோணமலை நகர சபையினூடாக 20 சுகாதார தொழிலாளர்களையும் 15 தள்ளி வண்டிகளையும் வழங்கியுள்ளதுடன் இவர்கள் ஒவ்வொரு நாளும் வீடுகளுக்கு சென்று டெங்கு பரவக்கூடிய பொருற்களை அகற்றி வருவதுடன் டெங்கு பரவாமல் தமது சேவைகளை முன்னெடுத்து வருவார்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அத்துடன் சன சமூக நிலையங்கள் ஊடாக சுகாதார தொண்டர்களை இணைத்துக்கொண்டு அவர்களுக்கு பயிற்சிகளையும் டெங்கு பற்றிய விழிப்புணர்வுகளையும் வழங்கி கிராமமட்டத்தில் செயற்படுவதற்கு நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் டொக்டர் வீ.விஜயகுமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.கயல்விழி. திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜ் மற்றும் நகர சபையின் செயலாளர் ஜெ.விஸ்னு மற்றும் மலேரியா நோய் கட்டுப்பாட்டு பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -