எம்.ஜே.எம்.சஜீத்-
பொத்துவில் அறுகம்பே அபிவிருத்தி போரத்தினால் (ADF) நடாத்தப்பட்ட பிரீமியர்லீக் – 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் றோயல் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.
அறுகம்பே அபிவிருத்தி போரத்தினால் நடாத்தப்பட்ட பிரீமியர்லீக் – 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (14) சின்ன உல்லை அல்-அக்ஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியின் போது பொத்துவில் றோயல் மற்றும் ரொக் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இதன் போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற றோயல் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்கள் முடிவில் 9விக்கட்டுக்களை இழந்து 89ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. றோயல் அணி சார்பாக றஸ்மி 35ஓட்டங்களை, தனது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
90ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரொக் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 8ஓவர்கள் முடிவில் 7விக்கட்களை இழந்து 71ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டு இப்போட்டியில் தோல்வியை தழுவினர். ரொக் அணி சார்பாக நிலாம் 17ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இதன்மூலம் 10அணிகள் பங்குபற்றிய அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் பிரீமியர்லீக் – 2017 கிரிக்கட் சுற்றுப் போட்டியில் றோயல் அணி சம்பியனாகத் தெரிவாகியது.
அறுகம்பே அபிவிருத்தி போரத்தின் தலைவர் எம்.எச்.எம். ஜமாஹீம் தலைமையில் நடைபெற்ற இறுதிப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.எம்.எம்.முஸர்ரத் கௌரவ அதிதியாகவும். பொத்துவில் உலமா சபைத் தலைவர் ஏ.ஆதம்லெப்பை மற்றும் அல்-அக்ஸா வித்தியாலய அதிபர் எம்.கே.கரீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும், கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது விளையாட்டு வீரர்களுக்கு அதிதிகளினால் கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.