பாலமுனையில் முபீனின் முயற்சியில் அழகிய சிறுவர் பூங்கா..!

ஆதிப் அஹமட்-
பாலமுனை பிரதேசத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் முயற்சியில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீமின் முப்பது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் மண்முனைப்பற்று பாலமுனைப் பிரதேசத்தில் மிக அழகிய நவீன முறையிலான சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு வேலைகள் நிறைவடைந்துள்ளது.இவ்வேலைகளை உலகில் சிறுவர் பூங்கா உபகரணங்கள் அமைக்கின்ற மிகச் சிறந்த நிறுவனமான அரிக்கன் டொட் கொம் நிறுவனமே அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பூங்காவின் வேலைகளை பார்வையிட நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன்,மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் அண்மையில் விஜயம் செய்தனர். இதன் போது கருத்து தெரிவித்த முபீன், இப்பூங்காவானது விரைவில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படுமென தெரிவித்தார். இதே போன்ற மேலும் இரண்டு சிறுவர் பூங்காக்கள் ஆரையம்பதி செல்வா நகர் மற்றும் காங்கேயனோடை ஆகிய பகுதிகளிலும் தலா முப்பது இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.​


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -