ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதுர் மத்திய கல்லூரியின் 95 ஆவது ஆண்டினை முன்னிட்டு இன்று (08) நடை பவணி ஏற்பாடாகியிருந்தது பாடசாலை வளாகத்திலிருந்து பிரதான வீதி வரைக்குமான பழைய மாணவர்களால் நடை பவணி ஆரம்பமானது நிதி சேகரிக்கும் நடைபவணியில் திருகோணமலை மாவட்ட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் மூதூர் மத்திய கல்லூரியின் அன்றைய பழைய மாணவருமாகிய அப்துல்லா மஹ்ரூப் விசேடமாக பங்கு கொண்டார் .
03 திகதி தொடக்கம் 07 திகதி வரை இவ் நடைபவணி ஏற்பாடு செய்யப்பட்டமையும் இதில் கண்காட்சிக்காக பாடசாலைக்கு நிதி திரட்டும் நடைபவணியாக அமைந்தது.மேலும் இதில் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர், முன்னாள் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஹரீஸ்,மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஜெஸ்மி உட்பட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.