தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டம் ஸ்கல்பா டிவிசனில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அமைக்கப்படவுள்ள 30 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ. ஸ்ரீதரன், எம். ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் ஏ. லோறன்ஸ், லிந்துல அமைப்பாளர் வீ. சிவானந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் வரவேற்கப்படுவதையும், பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



