நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பின்பு ஹட்டன் கிளை இ-பெஸ்ட் கல்வியகத்தினால் ஏற்பாடுசெயயப்பட்ட 1000 புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மூன்று மாத கால பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (10.04.2017) ஹட்டன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் இடம்பெற்றது. பயிற்சியை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இ-பெஸ்ட் கல்வியகத்தின் பணிப்பாளர் பி.எம்.மொகமட் ஜவுபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.