வட்ஸ்அப் (ப)குருப்பு

Mohamed Nizous-

வாழ் நாளெல்லாம் போதாதே
வட்ஸ் அப்பில் வருகின்ற மெசேஜ் பார்க்க
ஆள் மாறி ஆளாய் நாளும் பொழுதும்
அடிக்கடி கிளிப்கள் அனுப்புகிறார்
இடைக்கிடை நல்லதும் அனுப்புகிறார்.
ஆயிரம் கண்கள் இருந்தாலும்
அனைத்தையும் பார்த்து முடியாது

பாண்டவர் பல்லவர் காலத்து
பழைய வீடியோ கிளிப்புகளை
மீண்டும் மீண்டும் அனுப்புகிறார்
வேண்டாம் என்றாலும் விட மாட்டார்.
குறுப்பில் சேர்த்து
பருப்பைத் தீத்தி
வெறுப்பை சில பேர் ஊட்டுகிறார்.
உறுப்பினராக்கி ஆட்டுகிறார்.
ஆயிரம் கண்கள் இருந்தாலும்
அனைத்தையும் பார்த்து முடியாது.

டேட்டா பெகேஜ்கள் காலியாக
கோட்டா இடையில் முடிந்து போக
ஆட்டுக் குட்டி படுப்பதையும்
போட்டு அனுப்பிக் காட்டுகிறார்.
நட்பைப் பேண
நல்லது செய்ய
வட்ஸ் அப் மூலம் சிலர் முயல்வார்
வாழ்வில் நன்மை சேர்க்கின்றார்
ஆயிரம் கண்கள் இருந்தாலும்
அனைத்தையும் பார்த்து முடியாது

கடமை சுபஹை பாழ்படுத்தி
காலை வரைக்கும் தூங்கியவர்
விடிந்ததும் எழும்பி செயார் செய்வார்
வீடியோ கிளிப்பை தொழுகை பற்றி
இந்த செயாரால்
எந்தப் பயனும்
இருக்குமா என்பது சந்தேகமே
சுருக்கமா சொன்னால் வீண் வேலை.
ஆயிரம் கிளிப்கள் அனுப்பினாலும்
அவர் வாழ்வில் இன்றேல் பயனில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -