சுய தொழில் மேற்கொள்ளும் நபர்களுக்கு ஒலி மிகைப்பி வழங்கினார் ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒலி பெருக்கி சாதனங்கள் சேவை வழங்கும் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் ஒலி மிகைப்பி (Amplifier) ஒன்றினை பொறியியலாளர் ஷிப்லி பாறுக் 2017.01.23ஆந்திகதி வழங்கி வைத்தார்.

குறித்த நபர் கடந்த பல வருடங்களாக ஒலி பெருக்கி சேவையினை வழங்கி வருகின்ற போதிலும் தனது தொழிலினை மேம்படுத்துவதற்கான போதியளவான உபகரணங்கள் இன்மையினால் பல சிரமங்களுக்கு மத்தியில் தனது தொழிலினை முன்னெடுத்து வந்தார்.

தனது சுய தொழிலினை சிறந்த முறையில் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்காக ஒலி மிகைப்பி (Amplifier) சாதனம் ஒன்றினை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில் இவ் ஒலி மிகைப்பி (Amplifier) சாதானம் வழங்கி வைக்கப்பட்டது. 

ஒவ்வருவரின் திறமைகளையும் இனங்கண்டு அவர்களின் ஆற்றல்களுக்கேற்ப சுய தொழிலுக்கான உதவிகளை வழங்குகின்ற போது அவர்களின் வாழ்வாதாரத்தினை ஸ்திரப்படுத்த முடியும் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் இத்தகைய பல்வேறு சுய தொழில் உதவித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னேடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -