அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்பாக அமைந்து தற்காலிக வியாபார பந்தலில் வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கண்டிப் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையிலான வாய்த்தர்க்கம் சண்டையில் முடிந்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கத்தியால் வியாபாரத்தில் இருந்தவரைக் குத்தியதில் அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
கத்தியால் குத்திய அக்கரைப் பற்று பகுதியைச் சேர்ந்த நபர் தனது துவிச்சக்கர வண்டியை அங்கேயே விட்டு விட்டு ஓடித் தப்பியுள்ளார்.
ஆனால் கத்தியால் குத்தப்பட்ட நபர் ஆபத்தான நிலையைக் கடந்து சிகிச்சையில் இருப்பதாக அக்கரைப்பற்று பொலிஸ் தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -