இலவச டெப்...


Mohamed Nizous-

ஏ எல் படிக்கின்ற மாணவர்க்கு
இலவசமாய் டெப் வரப் போகிறதாம்
வாயெல்லாம் சிரிப்போடு பிள்ளைகள்
வரவேற்று மகிழ்கின்றார் அதை எண்ணி.

டெப்பிலே படிப்பது தப்பில்லை
இப்பவுள்ள நவீனத்தில் கற்பதனால்
இப்பிள்ளை முன்னேற முடியும் என்று
கொப்பிக்கு பதிலாக டெப்பினை
கொடுப்பதை பாராட்டும் அதேவேளை
இப்புதிய முறையினால் வருகின்ற
தப்பினை தடுப்பதற்கும் வழி வேண்டும்.

பாடசாலை வளவுள்ளே செல்போனை
பாவிக்கும் பிள்ளையை கண்டதுமே
ஓடிப் போய் அப்போணை பறித்தெடுத்து
உடைக்கின்ற சூழ்நிலை இருக்கும் நாட்டில்
பாடம் படி என்று கொடுக்கும் இந் டெப்பால்
பாடவதி படக்கூடும் பாட சாலை.

கலந்து படிக்கின்ற வகுப்புக்களில்
கண்டபடி சற்கள் அரங்கேறும்.
மலிந்த கீழ்த்தர வீடியோக்கள்,
மலயாளப் படம் ஓடும் வகுப்பறையில்.
ரசாயண வாய்ப்பாட்டை தேடும் போது
ரஜனியின் வாய் பாட்டும் தேடப்படும்
இசைகள் இயர் போணில் அரங்கேறும்
இருக்கின்ற நேரங்களை அது தின்னும்.

படிப்புக்கு மட்டுமென்று செற்பண்ணி
பல கொண்ட்றோல் போட்டுக் கொடுத்தாலும்
நொடிப் பொழுதில் அதையெல்லாம் மாற்றி விட
நூறு வழியிருக்கு மார்கட்டில்.
கொடுப்பதற்கு முன்னாலே இவற்றையெல்லாம்
கூடுதல் கவனத்தில் கொள்ளாவிடின்
அடுக்கடுக்காய் வெளிநாட்டு வகுப்புகளில்
அரங்கேறும் கொடுமைகள் இங்கும் வரும்.

பிற்போக்குத் தனத்தில் பிதற்றுவதாய்
பேரறிஞர் குழுவொன்று கொமண்ட்ஸ் எழுதும்
இப்போது கூட பிள்ளைகள்
இண்டனெட் பார்க்கலையா என்று கேட்கும்?

பிள்ளைகள் மேஜராக ஆகுமுன்னே
பேர்ஷனல் டெப் போண் சரிதானா
நல்லாக சிந்தித்து ஆராய்ந்து
நடு நிலையாய் எழுத வேண்டுகிறேன்.
எல்லாப் பிள்ளைகளும் தீயோர் எனும்
எடுகோளில் இதனை எழுதவில்லை.
பொல்லாத வயதினிலே பேர்ஷனல் டெப்
பொருத்தம் இல்லையென்றே சொல்ல வந்தேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -