பாறுக் ஷிஹான்-
கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இன்று (20) மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஜம்பாட்டா பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் பாஹீம் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இதன் போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து கேரளா கஞ்சா 400 கிராம் மற்றும் 200 கிராம் கஞ்சா கலந்த மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத் தேடுதல் நடவடிக்கையானது கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய உதவிப்பொறுப்பதிகாரி சில்வாவின் ஆலோசணைக்கமைய மேற்கொள்ளப்பட்டதாகவும் இவ்வாறான தேடுதல் நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.