கஹட்டோவிட்ட ரிஹ்மி -
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் கோரிக்கைக்கு அமைய, அமைச்சினது கிரிக்கட் அணியினரின் பாவனைக்கான கிரிக்கட் உபகரணங்களின் தொகுதியொன்று சென்ற 06 ஆந்திகதி விளையாட்டு அமைச்சினால் வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களினால் குறித்த உபகரணத் தொகுதி, அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களிடம் கையளிக்கப்படுவதையே படத்தில் காண்கிறீர்கள்.
இந்நிகழ்வில் அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, அமைச்சின் விளையாட்டு சங்கத்தின் தலைவரும் இணைந்த சேவைகள் பணிப்பாளருமான ஆலோக பண்டார, சிரேஸ்ட துணைச் செயலாளர் சாந்த வீரசிங்க மற்றும் கிரிக்கட் அணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.