கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த நூலக பரீட்சார்த்திகள் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்குடன் சந்திப்பு.!

ஹைதர் அலி -
கிழக்கு மாகாண பொதுச்சேவையின் உள்ளுராட்சி திணைக்களத்தின் நூலகர் தரம் III பதவிக்கு மாவட்ட அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த/மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை 2016.10.18ஆந்திகதி ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் சந்தித்து கலந்துரையாடினர்.

பரீட்சையானது 2015.11.13ஆந்திகதி முடிவுத் திகதியிட்டு 2015.12.30ஆந்திகதி பரீட்சை நடாத்தப்பட்டு 2016.09.29ஆந்திகதி கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு பெறுபேறுகள் அனுப்பிவைக்கப்பட்டது. குறித்த பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாகாணத்திலிருந்து ஒருவர் மாத்திரமே சித்தியடைந்தார். இதில் மாகாணத்தில் 36 வெற்றிடங்களுக்கு 54 பேர் மாத்திரமே பரீட்சார்த்திகளாக தோற்றியிருந்தும், இப்பதவிக்கான பரீட்சார்த்திகளுக்கு மூன்று பாடங்களுக்கு பரீட்சைக்கு தயாராக வேண்டிய போதிய அவகாசம் இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இருந்தபோதும் இவ்விண்ணப்பம் கோரப்பட்டபோது கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு விண்ணப்பத்திற்கான அறிவுறுத்தலில் 5ஆம் பக்கத்தின் குறிப்பு பந்தியில் இந்த ஆட்சேர்ப்பு பரீட்சையின்போது சித்தியடைந்துள்ளதாக கருதப்படுவதற்கு அனைத்து வினாப்பத்திரங்களிலும் தனித்தனியாக 40 புள்ளிகளை விட அதிகமான புள்ளிகளை பெறுதல் வேண்டும். எவ்வாறெனினும், மேலே குறிப்பிட்ட புள்ளியின் வரையறைக்கமைய தேவையாகவுள்ள வெற்றிடங்களை நிரப்ப முடியாமல்போகும் சந்தர்ப்பத்தில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பிரதம செயலாளர், கிழக்கு மாகாணம் மற்றும் செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் ஆகியோரின் உடன்பாட்டுடன் புள்ளி மட்டங்களை குறைத்து வெற்றிடங்களை நிரப்ப கவனம் செலுத்தப்படும் என்ற வாசகம் காணப்பட்டதாகவும் கிழக்கு மாகாணத்திலுள்ளவர்களின் சார்பாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட நூலக பரீட்சை எழுதிய ஏ.ஏ. கமால்தீன் அவர்கள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் விடயங்களை தெளிவாக தெரியப்படுத்தினார்.

இது விடயமாக கவனம் செலுத்திய மாகாண சபை உறுப்பினர் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது விடயமாக தெரியப்படுத்தியதோடு பரீட்சார்த்திகளின் விபரங்களை உடனடியாக தனக்கு வழங்குமாறும் இது விடயமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலமும் நேரடியாவும் சென்று தங்களுக்குரிய தீர்வினை பெற்றுத்தருவதாக பொறியியலாளர் ஷிப்லி பாறுக் வாக்குறுதியளித்தார்.

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுடன், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபை தலைவரும், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ. ஹைதர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -