96 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் மலையகத்தில் 148 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்..!

லக வங்கியின் 96 கோடியே 20 இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீட்டில் மலையக பிரதேசங்களில் 148 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ் வேலைத்திட்டத்தினுடாக மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில்; சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிர்மாணிக்கும் பணிகள் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, கேகாலை, காலி, ரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் 24 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

நுவரெலியா மாவட்டத்தில் சென்.கூம்ஸ், ஹூட்வில், நயபனை, கிரேட்வேஸ்டன் மவுன்ட்வேர்டனன், அல்டன், போடைஸ் மற்றும் பொய்ஸ்டன் ஆகிய தோட்டங்களிலும் கண்டி மாவட்டத்தில் சோகம, டெல்டா, குயின்ஸ்பெரி மற்றும் எல்கடுவ ஆகிய தோட்டங்களிலும் பதுளை மாவட்டத்தில் தம்பெதென்ன, பின்கரவ, டெமெரியா பி மற்றும் ஸ்பிரிங் வெலி ஆகிய தோட்டங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் ரம்புகந்த, ஹப்புகஸ்தென்ன, எல்ஸ்டன் மற்றும் பம்பெகம ஆகிய தோட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தில் அன்ஹிட்டிகம, பன்வத்த, சப்புமல்கந்த மற்றும் வெனிவெல ஆகிய தோட்டங்களிலும் காலி மாவட்டத்தில் தென்னெஹென, கிகியானகன்த, தும்பர, பெந்தொட்ட ஆகிய தோட்டங்களிலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதன் ஒரு கட்டமாக அட்டன் போடேஸ் தோட்டத்தில் சிறுவர் பராமரிப்பு நிலைத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -