பிரதமர் ரணில் ஹட்டனுக்கு விஜயம்...!

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க 28.08.2016 அன்று அட்டன் நகருக்கு விஜயத்தினை மேற் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.காவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ நெரிப்படுத்தினார்.

அட்டன் விஜிதா திரையரங்கின் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் வைபத்திற்கு நாட்டின் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், எம்.திலகராஜ் ஆகியோருடன் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அட்டன் நகரில் அங்கத்துவத்தை இணைத்துக்கொள்ளும் அங்கத்துவ சிட்டை வழங்கி பேரணி ஒன்றும் இடம்பெற்றது. 

அதேவேளை பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுகயீனம் காரணமாக இவ் வைபவத்திற்கு சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -