உயிர் அச்சுறுத்தலோடு வாழும் தோட்ட மக்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தினால் விடிவு..!

நுவரெலியா கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட வேவண்டன் தோட்டத்தில் பல வருடங்களாக குடியிருப்புக்கு மேலாக கல் விழும் அபாயத்தில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் ஏறத்தாழ 58 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். குறித்த மக்கள் 03.08.2016 இன்றைய தினம் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களை கொழும்பில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து தங்களுடைய பிரச்சினைகளை தெரிவித்ததோடு வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர் உடனடியாக வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சரின் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேவெண்டன் தோட்டம் ஆரம்ப காலம் முதல் தனியார் துறையினருக்கு சொந்தமானதாக காணப்பட்டபோதிலும் ஒரு பகுதி அரசால் மீள பெறப்பட்டு அகலவத்தை தனியார் கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே வேவண்டன் தோட்டம் பாதி அகலவத்தை தனியார் கம்பனிக்குரியதாகவும், மிகுதி தனியாருக்கு உரியதாகவும் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனாலும் இங்குள்ள மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை. குடியிருப்புகளுக்கு மேலாக கல் விழும் அபாயத்தினால் அச்சத்துடன் வாழ்க்கை நடத்தும் இவர்களுக்கு முன்னைய அமைச்சர்கள் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கவில்லை.

இந்நிலையில் இன்று அமைச்சரினூடாக பல வருட பிரச்சினைக்கு விடிவு கிடைக்கப்பெற்றுள்ளதோடு எதிர்வரும் காலங்களில் தனிவீடு திட்டத்திற்கான தொடக்க நிகழ்வு விரைவில் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -