26வது ஆண்டு ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக காத்தான்குடியில் மாபெரும் இரத்ததான முகாம்..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
'உதிரம் கொடுத்து உயிர் காப்போம்', இரத்ததானம் -உயிர் காக்கும் நம்பிக்கை எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் சுமார் 27 வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் மனிதாபிமான மற்றும் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 1990ஆம் ஆண்டு காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ஷூஹதாக்களின் ஞாபகார்த்த நினைவாக 5வது மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் 03-08-2016 இன்று புதன்கிழமை காத்தான்குடி-01 ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.

இஸ்லாமிய இளைஞர் முன்னணியின்; தலைவர் பீ.எம்.எம்.மர்சூக் தலைமையில் இடம்பெற்ற மேற்படி 5வது இரத்ததான முகாமில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,முக்கியஸ்தர்கள், கல்வியலாளர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள், தாதியர்கள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது இரத்ததானம் வழங்குவோரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் டாக்டர் எம்.எம்.எம்.அயாஸ் பரிசோதித்தார்.

இங்கு ஆண்கள் ,பெண்கள்,இளைஞர்கள்,யுவதிகள் தங்களது இரத்தத்தை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு தானமாக வழங்கினர்.

குறித்த காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணி காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக, கல்வி, தஃவா ஆகிய பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -