நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் - உதுமாலெப்பை MPC

எம்.ஜே.எம்.சஜீத்-
நீண்டகாலமாக அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களின் நீர்ப்பாசனத் திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு நமது மக்கள் பாரிய பிரச்சிணைகளுக்கு முகம்கொடுத்து வந்தனர். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் நீர்ப்பாசன திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய ஆட்சியிலும் விவசாயிகளின் நன்மை கருதி கரையோர பிரதேச நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்களினால் எமது பிரதேச விவசாயிகளும், மக்களும் நன்மையடையவுள்ளனர் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார். சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகளின் நீர்ப்பாசன பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன காரியாலயத்தில் இன்று (25) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் சுமார் 8500 ஏக்கர் விவசாயக் காணிகள் கல்ஓயா அபிவிருத்தித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நீரில் மூழ்கியுள்ளது. இக்காணிகளை நீரிலிருந்து மீட்பதற்கு பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அப்போதுதான் இக்காணிகளை மீட்டுக்கொள்ள முடியும்.இப்பிரதேச மக்களின் காணிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

இதற்காக கட்டம் கட்டமாக நீர்ப்பாசனத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிரந்தரமாக மக்களுக்கு நன்மை பெறக்கூடிய திட்டங்கள் பூரணமாக நிறைவேற்றி முடிக்கும் வரை நமது விவசாயிகள் பொறுமைகாக்க வேண்டும் எனவும், சம்புக்களப்பு வடிச்சல் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக பல அரசியல் தலைவர்கள் தேர்தல் காலங்களில் இப்பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளித்து இம்மக்களின் வாக்குகளினால் பதவிகளைப் பெற்றுவிட்டு இப்பிரச்சிணைகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்பதனை எமது பிரதேச விவசாயிகள் மறந்துவிடக்கூடாது.

இவ்வாறான திட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அரசியல் தலைவர்கள், நீர்ப்பாசன அதிகாரிகள், விவசாயப் பிரதி நிதிகளின் கருத்துக்கள் ஒன்றாக அமைய வேண்டும் அப்போதுதான் நாம் மேற்கொள்ளும் நீர்ப்பாசன திட்டங்கள் சிறந்ததாகவும், வெற்றிகரமாகவும் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடி வேம்பு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சம்புக்களப்பு வடிச்சல் திட்டம் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையேடி வேம்பு பிரதேச விவசாயிகளின் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசனக் காரியாலயத்தில் (25) இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் ஐ.மயூரன், நீர்ப்பாசன அதிகாரிகள் மற்றும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடி வேம்பு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -