கர்பலா பாடசலையின் கல்வி முன்னேற்றத்திற்கு NFGG கைகொடுக்கிறது..!

NFGG ஊடகப் பிரிவு-
ர்பலா அல்-மனார் வித்தியாலயத்திற்கான விஜயம் ஒன்றினை NFGGயினர் தவிசாளர் பொறியிலாளர் அப்துர்ரஹ்மான் மேற்கொண்டிருந்தார். இதன் போது பாடசாலையின் உதவி அதிபருடனும், ஏனைய ஆசிரியர்களுடனும்உரையாடிய அவர் பாடசாலையின் நிலைமைகளை நேரில் கேட்டறிந்து கொண்டார்.

தரம் 4 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஒரு தொண்டர் ஆசிரியை தற்காலிகமாக இருந்து வந்ததாகவும், கொடுப்பனவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவர் தற்போது கடமைக்கு வருவதில்லை , இதனால் அந்தமாணவர்களின் கல்வி நிலை மோசமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் உதவிஅதிபரினால் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு பாடசாலையின் ஏனைய கல்வி நிலவரங்கள் தொடர்பாகவும் அப்துர்ரஹ்மானுக்கு விளக்கமளிக்கப்பட்டதோடு இவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறும் கோரப்பட்டது .

இதனை விபரமாகக் கேட்டறிந்து கொண்ட பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் குறித்த தொண்டர் ஆசிரியைக்கானகொடுப்பனவினை தனது சொந்த நிதியிலிருந்து இந்த ஆண்டு முடியும் வரை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

அத்தோடு தரம் 4 இல் கற்கும் மாணவர்களுக்கான விசேட கற்பித்தல் மற்றும் பயிற்சி வகுப்புக்களைவழங்குவதாகவும் அவர் மேலும் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது NFGG யின் சிரேஸ்ட உறுப்பினர் ASM ஹில்மி அவர்களும் கலந்து கொண்டார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -