அஸீஸின் ”ஐந்து கண்டங்களின் மண்” கவிதை நூல் வெளியீட்டு விழா..!

முனீரா அபூபக்கர்-
முன்னாள் ஒஸ்ரிய நாட்டின் தூதுவரும் தற்போது வெளிநாட்டு அமைச்சின் பணிப்பாளர் நாயகமுமான கல்முனை எச்.ஏ. அஸீஸ் எழுதிய ” ஐந்து கண்டங்களின் மண்” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் வியாழக்கிழமை (26-05-2016) அன்று பி.ப. 4.45 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வைத்தியக் கலாநிதி தாஸிம் அகமது தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். நூல் அறிமுகத்தை சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ், நூல் மீளாய்வு பற்றிய உரையை கலாநிதி சுமதி சிவமோகனும் நிகழ்த்தவுள்ளனர்.

காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் நூலின் காலம்,கருப்பொருள்,காட்சி பற்றி சிறப்புக் கவிதை பாடவுள்ளதோடு கருத்துரையை நான் காணும் நல்லிணக்கம் தலைப்பில் தம்பு சிவாவும் சிறப்புரையை சிறப்பு விருந்தினர் ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்ச்சிகளை பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி தொகுத்து வழங்குவார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.எஸ். ஹமீத் வெளியீட்டகம் செய்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -