திருகோணமலையில் நிதியியல் நிபுணத்துவம் சம்பந்தமான இளைஞர்களுக்கான செயலமர்வு...!

எப்.முபாரக்-
திருகோணமமையில் இலங்கை மத்திய வங்கியும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து நடாத்திய இளைஞர்களுக்கான "நிதியீயல் நிபுணத்துவம்" சம்பந்தமான செயலமர்வு இன்று புதன்கிழமை (4) திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

நிதியினை எவ்வாறு கையாள்வது, வங்கிகளின் நடைமுறைகள் செயற்பாடுகள், பணப்புழக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது போன்ற விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டது. இதில் நூற்றி இருபது இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தார்கள். 

இச்செயலமர்வில் இலங்கை மத்திய வங்கியின் குழுத் தலைவர் ஸ்ரீ பத்மநாதன், ஆர்.டி.பி.வங்கியின் அதிகாரி ஜே.கரிகரன், திருகோணமலை சிறைச்சாலை அதிகாரி கே.பிரசாத்,மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.ரவிக்குமார், நிஸ்கோ முகாமையாளர் ஜெயசுந்தர உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -