தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு அமெரிக்காவிடம் கையளிப்பு...!

பாறுக் ஷிஹான்-
மிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது (11.05.2016) அன்று அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தியா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே, கனடா, பிரான்ஸ் மற்றும் ஐ. நா. என்பவற்றிற்கு கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்ம்பில் உள்ள அமெரிக்க தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் நேரடியாகக் கையளித்தனர். 

இதனைத்தொடர்ந்து அமெரிக்க குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பு நடை பெற்றது. இச்சந்திப்பின் போது பேரவையினர், தமிழ் மக்களிற்கான கொளரவமான நிரந்தரத்தீர்வின் அவசியத்தையும், பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணையின் அவசியத் தேவையையும் வலியுருத்தினர்.

மேலும், இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஒரு நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் பொறுப்புக்கூறல் எவ்வளவு முக்கியத்துவமானது என்பது பேரவையின் குழுவினரால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது மட்டுமன்றி இதற்கு ஒர் சர்வதேச விசாரணையின் அவசியமும் தெளிவான காரணங்களுடன் கூறப்பட்டு, பேரவையின் இது சம்மந்தமான வருங்கால நடவடிக்கைகள் எடுத்துக்கூறப்பட்டன.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலய துணைத்தூதுவர் தலமையிலான குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவையினரின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் லக்ஸ்மன் தலமையிலான பேரவையின் குழுவினருக்குமான ஒரு பிரத்தியேக சந்திப்பு யாழ் நகரில் சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -