மீராஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் மாணவர்,ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு..!

M.T. ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் 2015ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் அதி கூடிய சித்தியடைந்த 57 மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2016.04.29ஆந்திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வானது மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் முன்னாள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளரும், மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயலின் தலைவருமான கே.பீ.எஸ். ஹமீட் அவர்களின் தலைமையில் மீராஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.

இந்நிகவுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம். அஸ்ரப் அவர்கள் கலந்து சிறப்பித்தார். ஏனைய அதிதிகளாக கிழக்குப்பல்கழைக்கலகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், மீராஜூம்ஆ பள்ளிவாயயலின் பிரதித்தலைவருமான அஷ்ஷெய்க். எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி), மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அபுல்ஹசன், மீராஜூம்ஆ பள்ளிவாயயலின் உபதலைவர் அல்ஹாஜ். எச்.எம்.எம். பதுருதீன், மீராஜூம்ஆ பள்ளிவாயயலின் செயலாளர் கே. மர்சுக், மீராஜூம்ஆ பள்ளிவாயலின் பொருளாளர் அல்ஹாஜ் எஹ்யா, நிருவாக சபை உறுப்பினர்கள், ஊட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், கல்வி மான்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் கற்பித்த ஆசிரியர்களாக ஏ.எம். அன்வர் (பிரதி அதிபர்), எம்.ஐ.எம். றபீக், ஏ.எஸ்.எம். பர்சான், எம்.பீ.எம். சனூஸ், யூ.எல்.எம். முஸ்தபா, எம்.எச்.எம். ஹக்கீம், எம்.எம். பதுருதீன், எஸ்.யூ.எம். ஹனீபா, எஸ்.ஐ. றம்ளான், எம்.எல். சபூர் (பிரதி அதிபர்), வீ.டீ.எம். அன்வர், யூ.எல்.எம். சிபான், எஸ்.எம். ஆரிபா, எஸ்.டீ.ஏ. முனாப் ஆகியோர் மீராஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாக சபையினரினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

மீராஜூம்ஆ பள்ளிவாயலானது மட்/மம/மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மட்/மம/மீராவோடை உதுமான் வித்தியாலயம், மட்/மம/மாஞ்சோலை அல்-ஹிறா வித்தியாலயம், மட்/மம/பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம் மற்றும் மட்/மம/செம்மண்ணோடை அல்-ஹம்றா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தரம் ஆகியவற்றில் சித்தியடையும் மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வருடாவருடம் பாராட்டி கௌரவித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -