புனித கெளபாவைச் சுத்தம் செய்து வரும் கோடீஸ்வரர் -விபரம்


ரு மக்காவாசியான செல்வந்தர், தன் தொழுகைகளை மஸ்ஜித் அல் ஹரமில் முடித்து கொண்ட பின் அங்கு ஹரம் ஷரீபை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ஒரு வயோதிபருக்கு சில ரியால்களை ஸதக்கா செய்ய வேண்டும் என நாடி அவரை அணுகினார்.

எனது அன்பரே இதோ இதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அந்த முதியவர் சிரித்தவராக தன் பையிலிருந்த மணி பேர்ஸை வெளியே எடுத்தார் அந்த சஊதி.அரேபிய தனவந்தரிடம் கூறினார் நான் ஸதக்கா ஏதும் தேவையற்றவன். இதோ எனது மணிபேர்ஸை பாருங்கள் என்றார்
என்ன தொரு ஆச்சரியம்....?


அது பல வங்கிகளின் கார்ட்டுகளால் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தது.

அந்த சஊதி மனிதர் அதிர்ச்சியால் அதிர்ந்துவிட்டார் நீங்கள் யார் இங்கு என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று வினவினார்....?
.
அதற்கு அந்த முதியவர் கூறினார் எனக்கு காஷ்மீரிலும் இந்தியாவின் பல பாகங்களிலும் ஹோட்டல்கள் இருக்கின்றன.

அடிக்கடி மஸ்ஜிதுல் ஹரமை சுத்தம் செய்வதற்கு தொழில் வேலை வாய்ப்பு வீஸாவுக்கு விண்ணப்பித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் இந்த புனித மஸ்ஜிதின் பணியாளனாக இரவு பகலாக சேவையாற்ற விரும்புகிறேன்

அவன் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என் நற் செயல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவனது திருமுகத்தை நாடியே நான் இங்கு பணி புரிகிறேன் என்று அந்த காஷ்மிர் முதியவர் கூறினார்
ஸுப்ஹானல்லாஹ்! இதைத்தான் செல்வத்திலும் ஏழ்மை என்பதோ

படித்ததில் பிடித்தது
வை.எம்.பைரூஸ்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -