பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில் மகளிர் தின வைபவம் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் அலுவகத்தில் நடைபெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் கலந்து கொண்டு பெண்களின் சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த வைபவத்தில் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் கிராம மட்ட தலைவிமார் கலந்து கொண்டனர்.
இதன் போது சல்மா ஹம்சாவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பெண்களுக்கான கொடுப்பனவு திட்டத்தின் கீழ் சுகயீனக்காப்புரித்துக்கான கொடுப்பனவாக ஒருவருக்கு 25000 ரூபாவும் இரண்டு பேருக்கு தலா ஒருவருக்கு 8000 ரூபாவும் இன்னுமொருவருக்கு 4000 ரூபா கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.


