ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-
'எமது பாரம்பரியத்தை பாதுகாப்போம் - சிக்கனம் பேணுவோம்' எனும் தொனிப்பொருளிலான சாய்ந்தமருது திவிநெகும வங்கியின் தமிழ் சிங்கள புதுவருட கொடுக்கல் வாங்கல் நிகழ்வு இன்று (15) வெள்ளிக்கிழமை காலை 9.33 மணியளவில் இடம்பெற்றது.
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் வழிகாட்டலில் சாய்ந்தமருது திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எல்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.உதுமாலெப்பை, திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, எம்.எஸ்.எம்.மனாஸ், வங்கி உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், வலய முகாமையாளர் எம்.எம்.எம்.முபாறக் உள்ளிட்ட திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, இறக்காமம் பிரதேச செயலாளர் எல்.எம்.நஸீர், சாய்ந்தமருது திவிநெகும வங்கி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் உள்ளிட்ட அதிதிகளினால் புதுவருட கொடுக்கல் வாங்கல்கள் சுப நேரத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்;டது.
இதனைத் தொடர்ந்து வங்கியில் புதுவருட சிற்றூண்டி நிகழ்வும் இடம்பெற்றது.


