விதவைகள் தொடர்பில் நாம் அதிக கரிசனை கொள்ள வேண்டும் - ரோஹினா மஃறூப்

அஷ்மி -
ணவனை இழந்து தனியாக தனது குடும்ப பொறுப்பை சுமந்து அல்லலுறும் விதவைகள் தொடர்பில் நாம் கரிசனை கொள்ள வேண்டும் இது சமூகத்தின் ஒவ்வொருவரதும் கட்டாய கடமையாகும்.

இவ்வாறு முஸ்லீம் விதவைகள் அமைப்பினருடானான கலந்துரையாடல் மூதூரில் இடம் பெற்ற போது சமூக மறுமலர்ச்சிக்கான பெண்கள் அமைப்பின் தலைவியும் பெண்ணியலாளருமான திருமதி ரோஹினா மஃறூப் தெரிவித்தார்

மேலும் அவர் உரையாற்றுகையில்:

பாராபட்சமற்ற நெறிமுறைகளைக் கொண்ட எமது மார்க்கத்தில் கணவனை வெவ்வேறு சந்தர்பங்களில் இழந்து வாழ்வை இழந்து நிற்கும் பெண்கள் தொடர்பில் மிக தெளிவாக அவர்களது மறுவாழ்வு அல்லது அவர்களது வாழ்வாதாரம் தொடர்பில் அழுத்தமாக கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் நம் சமூகம் அவர்களைக் கண்டு கொள்வதில்லை இந்த நிலை மாற வேண்டும் இதற்கான மாற்றம் எம்மிலிருந்து உருவாக வேண்டும்.

இது அவசரமாக நாம் செயல்படுத்த வேண்டிய வேலைதிட்டமாகும் இதற்காக முழு நேரம் களத்தில் நிற்பதற்காகவே நாம் தயாராகி இருக்கிறோம் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -