காத்தான்குடி விளையாட்டு மைதானத்திற்கு இரண்டு மில்லியன் நிதி ஒதிக்கீடு..!

M.T. ஹைதர் அலி,எம்.ரி.எம்.யூனுஸ்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்கள் அன்மையில் காத்தான்குடி விளையாட்டு மைதானத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டு மைதானத்தின் குறைபாடுகளை கண்டறிந்தார். 

முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அவர்களின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக முறையற்ற விதத்தில் கனரக வாகனங்களை அங்கும் இங்கும் செலுத்தி மிக நீண்டகாலமாக மூடி வைக்கப்பட்ட நிலையில் பல இலட்சம் ரூபா செலவில் செப்பனிடப்பட்டட மைதானம் முற்றாக பாவனைக்கு உதவாத நிலைக்கு மாற்றப்பட்டது. 

இதனையடுத்து மூடிவைக்கப்பட்டிருந்த மைதானத்தை பாவனைக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க பிரதேச செயலாளர் ஊடாக நகர சபை செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் மைதானம் மேடு பள்ளமாகவும் குண்றும் குழியுமாக நிறைந்து காணப்பட்டதால் வீரர்கள் விளையாடுவதற்கு உபயோகப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

அத்தோடு காத்தான்குடி பிரதேசத்தில் காணப்படுகின்ற ஒரேயொரு பொது விளையாட்டு மைதானம் இதுவாகும். இது விடயமாக கவனம் செலுத்திய மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கமைவாக 2,000,000.00 ரூபா நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு மீண்டும் பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் முயற்சியினால் புணர்நிர்மானம் செய்யப்படவுள்ளது. 

இவ்விளையாட்டு மைதானத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக், காத்தான்குடி பிரததேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸ்ஸம்மில், பிரதேச செயலாகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலகத்தின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், காத்தான்குடி நகர சபை செயலாளர் சர்வேஸ்வரன் மற்றும் நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். 

அத்தோடு இதனை எவ்வாறு முதற்கட்டமாக கிடைக்கப்றெ்றுள்ள 2,000,000.00 ரூபா நிதியை குறைந்தபட்சம் வீரர்கள் விளையாடக்கூடிய வகையில் செப்பணிடுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான விலைமனு கோரல் மதிப்பீட்டையும் மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் பணிப்புரை விடுத்தார். 

மேலும் இம்மைதானத்தின் செப்பனிடும் பணிகள் இரண்டு மூன்று மாதத்திற்குள் முடிவுறும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -